Wednesday 8 April 2015

 
காற்று மாசுபாடு ஒரு உண்மையான பொது சுகாதார மற்றும் பிற விஷயங்களை உலக வெப்பமாதல், அமில மழை மத்தியில் இருந்து ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல் பிரச்சினை, ஓசோன் மண்டலத்தில் சரிவு ஆகிறது. இந்த அட்டவணையில், பெயர்கள் சில பொதுவான மாசுகள், ஆதாரங்கள், மற்றும் சூழல் தங்கள் விளைவு.காற்று மாசுபாடு வளிமண்டலத்தில் துகள் அல்லது வாயு விஷயம் விரும்பத்தகாத அளவு விவரிக்க பயன்படுத்தப்படுகிறது ஒரு பொதுச் சொல். காற்று மாசுபாடு, இயற்கை அல்லது மனிதனால் இருக்க முடியும். அது எரிமலை வெடிப்புகள், காட்டு தீ, அல்லது தூசி புயல்கள் போது இயற்கையாக. இந்த மனிதர்கள் ஒரு அவ்வப்போது சிக்கல் உள்ளது. எனினும், கடந்த நூறு ஆண்டுகளில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட காற்று மாசுபாடு, முக்கிய, பிரச்சினையாக மாறியுள்ளது. கலிபோர்னியா, நம் நகரங்களில் நாட்டில்  நகர்ப்புற பகுதிகளில் உள்ளன.

ஊடகம் என்பது ஒரு செய்தியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த உதவும் கருவி. இந்தியாவில் பல வகைகளில் ஊடகம் செயல்பட்டு வருகின்றது. அதாவது அச்சு ஊடகம், காட்சி ஊடகம், வானொலி. இனையதளம் போன்று பல பரிமானங்களில் செயல்பட்டு வருகின்றது.மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஊடகம் திகழ்கிறது.
சரியாக ஊடக என்பது என்ன புரிந்து கொள்ள, அது கால வரையறை முதல் முக்கியம் "ஊடகம்." இன்னும் குறிப்பாக, நாம் வெகுஜன ஊடகங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பல அர்த்தங்கள் மற்றும் புரிதல் விளக்கங்கள் கால இருக்கக்கூடும் என்றாலும் "வெகுஜன ஊடகங்கள்," எங்கள் கட்டமைப்பை நாம் வெகுஜன ஊடக பதிக்கப்பட்ட மதிப்புகள் செய்திகளை கட்டுகிறோம் என்று ஒரு குழு உள்ளது என்று சொல்ல முடியாது, என்று பொதுப் ஒரு குறிப்பிட்ட பகுதியை அந்த செய்திகளை பரப்புகின்றன ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும். 

Tuesday 7 April 2015

அம்மா சிமெண்டு
சேலம் மாவட்டம் முழுவதும் அம்மா சிமெண்டு 24 இடங்களில் கிடைக்கும்.முதல் விற்பனையை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஏழை, எளிய மக்களும் பயனடையும் வகையில் குறந்த விலையில் சிமெண்டு வழங்கும் திட்டமாக அம்மா சிமெண்டு என்ற திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி இத்திட்டம், கடந்த 5-ந் தேதி இந்த திட்டம் திருச்சியில் தொடங்கப்பட்டது. இதனடிப்படையில் மூட்டை ஒன்று ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 11-1-2015 அன்று இத்திட்டத்தின் தொடக்க விழா திருவாக்கவுன்டனூர் அருகே நடைபெற்றது.இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகரபூசனம் தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., இடைப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.எல்,.க்கள், கலந்து கொண்டு துவங்கி வைத்தனர்.
24 இடங்களில் கிடைக்கும்
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் சேலம், அயோத்தியாப்பட்டிணம், கெங்கவல்லி, மேச்சேரி, மகுடஞ்சாவடி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், தாரமங்கலம், கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி, நங்கவள்ளி, கொளத்தூர், காடையாம்பட்டி, ஏற்காடு  15 ஊராட்சி ஒன்றிய கிடங்குகளிலும், நுகர்வோர் வாணிப கழகம் மூலம் வாழப்பாடி, நரசிங்கபுரம், இடைப்பாடி, சேலம், சீலநாயக்கன்பட்டி,ஆத்தூர், சங்ககிரி, மெய்யனூர், மேட்டூர், ஓமலூர் ஆகிய 9 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் அம்மா சிமெண்டு கிடைக்கும் தெரிவித்தனர்.

இத்திட்டத்தினால் ஏழை, எளிய மக்களும் பயனடைவார்கள்,மேலும் குறைந்த, நடுத்தர வருமானத்தில் உள்ளவர்களும் எளிதில் சொந்த வீடு கட்டவும், அவர்களது கனவு நிறைவேரும் என்ற என்னத்திலும் பொதுமக்கள் இத்திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
சேலத்தில் 60 கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற கல்வி கண்காட்சி, ஆலோசனை முகாம் நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை நடக்கிறது.

கல்வி கண்காட்சி

சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் கல்வி ஆலோசனைத் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் ஈரோடு மற்றும் சேலத்தில் ஆண்டுதோறும் குமாரபாளையம் ஸ்ரீ ரெங்கசுவாமி கல்வி அறக்கட்டளையின் சார்பில் இலவசமாக கல்வி கண்காட்சி மற்றும் ஆலோசனை முகாம் கடந்த 12 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு வெற்றிகரமாக 13-வது ஆண்டாக இந்த கண்காட்சி சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் கண்காட்சியை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.

வளர்ச்சியை தடுக்க முடியாது

இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினரான மதுரை தியாகராயர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான கு.ஞானசம்பந்தம் கலந்து கொண்டு பேசுகையில், ‘பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களை காட்டிலும் அவர்களது பெற்றோர்களுடைய முகம்தான் அதிக குழப்பமாக இருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும், என்பதற்காகத்தான் இந்த குழப்பம். முன்னர் மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். இப்போது மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்கிறார்கள்.

இப்போதுள்ள மாணவர்களை ஒரு திருக்குறளை ஒப்பிக்க சொன்னால் ஓடிவிடுவார்கள். படிக்கும்போதே அடுத்து நான் என்னவாக ஆவேன் என்பதை முடிவு செய்ய வேண்டும். அப்துல்கலாமுக்கு விமானப்படையில் வேலை கிடைக்கவில்லை. ஆனால் முப்படையினரும் மரியாதை செலுத்தும் குடியரசுத்தலைவராக உயர்ந்தார். நமது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தால் மற்றவர்களுக்கு தீமை செய்ய நேரமிருக்காது. நீங்கள் என்னவாக ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் உங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது’ என்றார்.

நேர்மறை சிந்தனை

சென்னை இன்போசிஸ் நிறுவன மனித வளபிரிவு வட்டார தலைவர் மற்றும் மனித வணிகமேலாளர் சுஜித்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாணவர்களுக்கு படிக்கும் பாடத்தில் தெளிவு மிக, மிக முக்கியமானதாகும். மாணவர்கள் மதிப்பெண் பெறுவது அவர்கள் திறமை. உங்கள் குழந்தைகள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றாலும் அவர்களை திட்டாதீர்கள். வாழ்க்கை என்பது மராத்தான் ஓட்டம் மாதிரி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்த 3 நாள் கண்காட்சியில் கடந்த 2 நாட்களாக சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, சென்னை, கரூர், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த 3 நாள் கண்காட்சியில் பங்கேற்கும் 60-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு, பாடப் பிரிவுகள் குறித்து விளக்கங்களும், அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்த விளக்கமும், கல்வியாளர்களை கொண்டு எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

Thursday 26 March 2015

கோடை 100.5
    கோடை பன்பலை 100.5 என்ற அலைவரிசையில் திருச்சியில் இருந்து நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது. இது அரசின் நேரடி கட்டுபாட்டில் இயங்கும் வானொலி இந்த வானொலியின் ஸ்டேசன் கொடைக்கானலிருந்து வெளியாகிறது .
    இந்த 100.5 அலைவரிசையில் தினமும் பல நிகழ்ச்சியில் பல விதமாக நடைபெறுகிறது. அரசு வானைாலியான கோடை பன்பலையில் செய்திகள் ஒலிப்பரப்படுகிறது. செய்திகள் உள்ளடக்கிய நிகழ்ச்சி தமிழில் கோடை பன்பலைக்கு மட்டுமே உரிமம் அளிக்கப்படுகிறது. இதில் மாலை 5மணிக்கு செய்திச்சுருக்கம் என்ற தலைப்பில் 1 நிமிட செய்திகள் வெளியாகிறது. இந்த 1 நிமிட மாநிலச் செய்தி முதல் உள்ளுர் செய்திகள் வரை வெளியிடப்படுகிறது. இதில் குறைந்தது 20 செய்திகளின் தலைப்பை இதை தொடர்ந்து சித்திரை செவ்வாணம் என் தலைப்பில் உதயசாந்தி ஒரு அழகான காதல் கவிதையை சொல்லி ஒரு காதல் பாடல்களை வழங்கினார். ஒவ்வொரு கவிதையும் மிகவும் அருமையாக மனைதை உருக்கும் விதமாக இருந்தது. இதை தொடர்ந்து வந்த ஒவ்வொரு பாடல்களும் சகலமான காதலை வெளிபடுத்தும் விதமாக இருந்தது. 1 மணிநேரமும் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கி நேயர்களை காதலை மிதக்க வைத்தார்.
இந்த பன்பலையில் இது போன்று பல வித்தியாசமான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. .
காவுத்தீண்டல்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்படும் குறும்படம் காவுத்தீண்டல். இப்படத்தை அகடனம் மரணம் போன்ற படங்களை இயக்கிய அன்பு இயக்குகிறார்.
   அகடனம் மரணம் என்ற வெற்றிப்படங்களை தந்த அன்பு ” 2 ”ஆண்டுகளுக்கு பிறகு இயக்கும் படம் காவுத்தீண்டல் . இரண்டு ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்படுவதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் இவருடைய நான்காவது படம் அதனால் இப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
    சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீசர் -யை வெளியிட்டார். இது அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டார். இது அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. நல்ல வேற்பும் கிடைத்தது. இப்படத்தின் கார்த்திக் சக்கரவர்த்தி விக்னேஷ் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு குணா கர்ணா செய்துள்ளனர். படத்தொகுப்பை சபரீஸ் கையாண்டுள்ளார். அன்புவின் முந்திய படங்களின் வேலை பார்த்தவர்கள் இப்படத்தில் யாரும் இல்லை. புதிய கூட்டணியில் உருவாக்கப்பட்ட படம் காவுத்தீண்டல். இது  இன்னும் சில தினங்களில் வெளிவர தயாராக உள்ளது. இதை பொருத்திருந்து காண்போம்.  

Wednesday 25 March 2015


நாளைய இயக்குநர் ,

     நாளைய இயக்குநர் பகுதி -5 ல் இறுதி சுற்றுக்கு பல இயக்குநர்கள் உள்ளனர் இந்த வாரம் இறுதி சுற்றுக்கு தேர்வானைர்களிடம் அவர்களும் அவர்களுடைய அனுபவம் அவர்களது குழு போன்றவர்களிடம் கலந்துரையாடினார்கள். 
    முதலில்  கடந்த 4 பகுதிகளிலும் எந்த ஒரு பெண்ணும் இறுதி சுற்றுக்கு வரவில்லை. ஆனால் பகுதி 5ல் ஒரு பெண் தேர்வாகியுள்ளது முதல் முறை 11பேர் தேர்வாகியுள்ளனர். 
    உதயகுமார் ராசு இரஞ்சித் இரஞ்சித கல்ப்ரா மார்ட்டின். 
இந்த பகுதியில் சுந்தர்சி வசந்த் கார்த்திக் சுப்புராஜ் நடுவர்களாக பங்கேற்றனர் இதில் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ள இயக்குனர்களின் சிறந்த படங்களை பற்றியும் அதன் சில காட்சிகளையும் காண்பித்து பேசினார்.
   பாலாஜி மோகன் நலன் குமாரசாமி கார்த்திக் சுப்புராஜ் வேந்தன் போன்றவர்கள் கடந்த 4 பகுதியில் மகுடம் சூடினா். இவர்கள் வரிசையில் இந்த பகுதி 5 -ல் 11 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களில் யார் அடுத்து மகுடம் சூடுவது என்று பொறுத்து இருந்து பார்ப்போம் .

Thursday 5 March 2015



My film (UNAR) won 2nd prize in awareness film festival on 20-feb-2015, and also my film (THIRUMANGAI) achieve the best theme award in the festival.