Tuesday 7 April 2015

அம்மா சிமெண்டு
சேலம் மாவட்டம் முழுவதும் அம்மா சிமெண்டு 24 இடங்களில் கிடைக்கும்.முதல் விற்பனையை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஏழை, எளிய மக்களும் பயனடையும் வகையில் குறந்த விலையில் சிமெண்டு வழங்கும் திட்டமாக அம்மா சிமெண்டு என்ற திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி இத்திட்டம், கடந்த 5-ந் தேதி இந்த திட்டம் திருச்சியில் தொடங்கப்பட்டது. இதனடிப்படையில் மூட்டை ஒன்று ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 11-1-2015 அன்று இத்திட்டத்தின் தொடக்க விழா திருவாக்கவுன்டனூர் அருகே நடைபெற்றது.இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகரபூசனம் தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., இடைப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.எல்,.க்கள், கலந்து கொண்டு துவங்கி வைத்தனர்.
24 இடங்களில் கிடைக்கும்
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் சேலம், அயோத்தியாப்பட்டிணம், கெங்கவல்லி, மேச்சேரி, மகுடஞ்சாவடி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், தாரமங்கலம், கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி, நங்கவள்ளி, கொளத்தூர், காடையாம்பட்டி, ஏற்காடு  15 ஊராட்சி ஒன்றிய கிடங்குகளிலும், நுகர்வோர் வாணிப கழகம் மூலம் வாழப்பாடி, நரசிங்கபுரம், இடைப்பாடி, சேலம், சீலநாயக்கன்பட்டி,ஆத்தூர், சங்ககிரி, மெய்யனூர், மேட்டூர், ஓமலூர் ஆகிய 9 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் அம்மா சிமெண்டு கிடைக்கும் தெரிவித்தனர்.

இத்திட்டத்தினால் ஏழை, எளிய மக்களும் பயனடைவார்கள்,மேலும் குறைந்த, நடுத்தர வருமானத்தில் உள்ளவர்களும் எளிதில் சொந்த வீடு கட்டவும், அவர்களது கனவு நிறைவேரும் என்ற என்னத்திலும் பொதுமக்கள் இத்திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

No comments:

Post a Comment